[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

சினிமா பாணியில் போலீஸை தாக்கி கைதியை கடத்திய கும்பல் !

the-rowdy-attacked-police-kidnapped-the-prisoner

சென்னையில் இருந்து கேரளாவிற்கு நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்து அழைத்து செல்லும் போது, கோவை அருகே 30 பேர் கொண்ட கும்பல் கேரளா காவல் துறையினரை தாக்கி நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி சென்றுள்ளனர்.  

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகாராஜன்(43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப், என்பவர் 45 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஜேக்கப் கடன் வாங்கியிருந்தபோது தன்னுடைய வால்வோ காரை மகாராஜனிடம் தந்துள்ளார். அதைத்தொடர்ந்து மகாராஜனிடம், வாங்கிய பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்த பிறகும் மகாராஜன் காரை தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசார் நேற்று மாலை சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை கைது செய்து கேரளாவிற்கு இன்னோவா காரில் அழைத்து சென்றனர்.

கேரள போலீசார் சென்ற கார் நள்ளிரவு சூலூர் பகுதியில் உள்ள கணியூர் சுங்க சாவடி அருகே வந்தபோது அங்கு தயாராக இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய கும்பல் கேரள போலீசாரை தாக்கிவிட்டு அந்த காரிலிருந்த மகாராஜனை மீட்டுச் சென்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற விபரம் தெரியாத நிலையில் கேரள போலீசார் நடந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கருமத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close