[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“நாங்கள் சமுதாயத்தை நேசிக்கிறோம்”.. தூத்துக்குடியின் முதல் திருநங்கை வழக்கறிஞர்..!

tuticorin-first-transgender-lawyer-interview

சமுதாயம் நேசிக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சமுதாயத்தை நேசிக்கிறோம் என தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் விஜி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்துநகரை சேர்ந்தவர் செல்வராஜ்- குருவம்மாள் தம்பதியினர். இவர்களது மகன்  திருநங்கையான பின் தனது பெயரை விஜி (வயது 38) என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் லோக் அதாலத் நீதிமன்றத்தில் உறுப்பினராக இணைந்து பணியாற்றிய இவரை, லோக் அதாலத்தின் தலைவர் குருவையா ஊக்கப்படுத்தியதன் காரணத்தினால் ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் இணைவதற்கு 14 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளதாக கூறிய அவர், இதனை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திருநங்கை விஜி மேலும் கூறுகையில், “ சாதிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகவே வழக்கறிஞர் பணிக்காக பயின்றேன். திருநங்கைகள் வரும் காலங்களில் காவல்துறையிலும், ஆட்சிப்பணியிலும் பங்கேற்கும் விதத்தில் பயிலவேண்டும் என்பது எனது ஆசை. சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பினை பாதியில் நிறுத்தியிருந்தால் அதனை தொடர்ந்து படிக்க அரசு ஆவண செய்யவேண்டும். சமுதாயம் நேசிக்கிறதா என்பது முக்கியமல்ல சமுதாயத்தை நாங்கள் நேசிக்கிறோம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close