[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 4 வது முறையாக தள்ளுபடி 

srivilliputhur-district-court-rejected-aruppukottai-professor-nirmala-devi-bail-petition

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 4 வது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்திருந்தார். நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்ரல் 16 ம் தேதி கைது செய்யப்பட்டார்.பின் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.கைதான நிர்மலா தேவி, கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் பேராசிரியர் முருகன் (42), ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி (39) ஆகியோரையும் கைது செய்தனர். தற்போது மூவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளார்கள்.

இந்நிலையில் நிர்மலா தேவி உடல் நலக் குறைவை சுட்டிக் காட்டி 4 வது முறையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த ஜாமீன் மனு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி முத்துசாரதா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து நிர்மலா தேவி மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close