[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

‘தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்’ - டிடிவி தினகரன்

ammk-vice-secretary-ttv-dhinakaran-said-about-tuticorin-protest

மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. தடையை மீறி ஆட்சியர் நுழைந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எஸ்பி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது, மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன். ஆட்சியரை தவறாக வழி நடத்தி 144 தடை உத்தரவு போடப்பட்டது தவறு. மக்கள் அந்த ஆலையை மூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதில் அரசியல் தூண்டுதல் எதுவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அரசின் இந்த மெத்தன போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம். தூத்துக்குடி போராட்டத்திற்கு பிறகாவது அரசு விழித்துக் கொண்டு மக்களின் உணர்வை மதித்து ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களை கைவிட வேண்டும். போராட்டக்காரர்களை கைது செய்வது, தேசவிரோத வழக்கு போடுவது என்பது எல்லாம் தீர்வாக அமையாது. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close