[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்

பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி

srivilliputhur-district-court-rejected-aruppukottai-professor-nirmala-devi-bail-petition

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவி கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் பேராசிரியர் முருகன் (42), ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி (39) ஆகியோரையும் கைது செய்தனர். தற்போது மூவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளார்கள்.

முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், நிர்மலா தேவியும் உடல் நலக் குறைவை சுட்டிக் காட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

விசாரணையின் போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜாமீன் மனுவை ஏற்கக் கூடாது என்று தமிழக அரசின் வழக்கறிஞர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, கருப்பசாமி, முருகன் ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரணையை, மே 18 -ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close