[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

பட்ஜெட்டில் இந்தியை திணிப்பதா..?: தமுஎகச கண்டனம்

tha-mu-ea-ka-sa-condemn-finance-minister-arun-jaitley-in-a-first-presents-bilingual-budget-speech

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை இந்தி மொழியில் தாக்கல் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக‌ அந்தச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், மக்களின் மொழி உரிமை மீதும், நாட்டின் பன்முகத்தன்மை மீதும் தொடுக்கப்படுகிற தாக்குதல் எனக் கூறியுள்ளது. ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தி மொழியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கையில், “சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தி மொழியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி இவ்வாறு செய்திருப்பது, அந்நிய மொழியைத் தவிர்த்து ஒரு இந்திய மொழியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று மேலோட்டமாக எடுத்துக்கொண்டு மகிழ்வதற்கானதல்ல. மாறாக, அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தி, பாஜக-வின் ஒற்றை மொழி ஆதிக்கக் கொள்கைப்படி இந்தியைத் திணிக்கிற ஏற்பாடேயாகும். இதுவரையில் திரைமறைவாகச் செய்யப்பட்டு வந்தது, இப்போது பல மடங்கு ஆணவத்தோடு அப்பட்டமாகச் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்குகிற அரசமைப்பு சாசனத்தையும், இந்தி பேசாத மக்கள் ஏற்கிற வரையில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்ற முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியையும் அவமதிக்கிற நடவடிக்கையே இது. தேசிய அளவிலான இந்த மிக முக்கியமான ஆவணத்தை அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிடுகிற அக்கறையோ பொறுப்போ மத்திய ஆட்சியாளர்களிடம் இல்லை. ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிடுவது என்பதில் கடந்த கால நடைமுறையைப் பின்பற்றுகிற நரேந்திர மோடி அரசு, நாடாளுமன்றத்தில் அதை எந்த மொழியில் தாக்கல் செய்வது என்று வருகிறபோது, கடந்த கால நடைமுறையிலிருந்து விலகியது திட்டமிட்ட இந்தித் திணிப்பேயாகும்.

நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்களுக்குப் பாதகமான பல தாக்குதல்கள் ஒருபுறமிருக்க, மக்களின் மொழி உரிமை மீதும் நாட்டின் பன்முகப் பண்பாட்டுத் தளத்தின் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற இந்த வன்மமான தாக்குதலை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ் உரிமைக்காகவும் இந்திய மொழிகளின் சமத்துவத்துக்காகவும் இயக்கம் காண்கிற அனைவரும் இதை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close