[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

சென்னையில் மீண்டும் கனமழை! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

heavy-rain-falling-in-chennai

சென்னையில் மாலை நேரத்தில் மிதமாக தொடங்கிய மழை, தற்போது கனமழையாக பெய்து வருகிறது.

சென்னையில் பரவலான கனமழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மாம்பலம், பாடி, கோயம்பேடு, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், ராயபுரம், கொடுங்கையூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று மதுரவாயல், வானகரம், போரூர், ஆவடி, அம்பத்தூர், பூவிருந்தவல்லி, மாங்காடு, வளசரவாக்கம், ராமாபுரம், வில்லிவாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்ட பகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், பெரியபாளையம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தற்போது திட்டம் எதுவும் இல்லை என்றும், மழையை பொறுத்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்றும் புதிய தலைமுறைக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close