[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

மீனவர்களுக்காக 'நீலப்புரட்சி' திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

prime-minister-modi-launched-the-blue-revolution-project-for-the-fishermen

ராமேஸ்வரம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க வழிவகை செய்யும் வகையில் அப்துல் கலாம்‌ நினைவாக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கலாம் நினைவு தினத்தில், அவர் பிறந்த ராமேஸ்வரம் மண்ணிலுள்ள மீனவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் புதிய திட்டம் ஒன்றினை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். நீலப்புரட்சி என்னும் இந்த புதிய திட்டத்தின் மூலம் பார‌ம்பரிய மீன்‌பிடி‌ப் பகுதியாகக் கருதப்ப‌டும்‌ பாக் நீ‌ரி‌‌‌‌ணைப் பகுதியில்‌ மீன்‌பிடிக்கச் செல்லும் தமிழக மீ‌‌னவர்கள் இலங்கை‌க்‌ கடற்படையால் ‌அ‌டி‌க்கடி‌ கைது ‌செய்ய‌ப்‌படும்‌ பிரச்னைக்கு முற்று‌‌ப்புள்ளி‌ ‌வைக்கப்படும் என மீனவர்கள் நம்புகின்றனர். ராமே‌ஸ்வ‌ரம் மீனவர்கள், பாக் நீ‌ரி‌ணைப்‌ ப‌குதியைத் தவி‌ர்த்து, வேறு இ‌டங்க‌‌ளில் மீ‌‌ன்‌‌பி‌டிக்க நீலப்புரட்சி மூலம் வழி‌‌‌‌வ‌‌கை செய்யப்ப‌ட்டுள்ளது. இதனை மீனவர்களும் வரவேற்றுள்ளனர்.

புதிய திட்டத்தின் தொடக்கமாக இலங்கை கடற்படையிடம் படகைப் பறிகொடுத்த 6 மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி ‌வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீலப்புரட்சி திட்டம் முற்றிலும் செயல்பாட்டுக்கு வர சில ‌வரு‌டங்கள் ஆகும். அதுவரை பாக்நீரிணை‌ப் ‌ பகுதியில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையால்‌ ஏற்படும்‌ அச்சுறுத்தலை தடுக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close