[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

மக்களால் சுற்றி வளைக்கப்பட்ட தி.நகர் எம்.எல்.ஏ

t-nagar-mla-sathyanarayanan

கூவத்தூரில் இருந்து திரும்பிய தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன் காலை நடைபயிற்சிக்காக ஜீவா பூங்காவிற்கு சென்றார். அப்போது, அங்கு நடைபயிற்சிக்காக வந்திருந்த சுமார் 25 பேர் அவரை சுற்றி வளைத்து, சசிகலா அணியை ஏன் ஆதரித்தீர்கள் என்று கேட்டனர்.

மக்களின் கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் திணறிய எம்.எல்.ஏ அங்கிருந்து வெளியேறினார். “வோட்டு கேட்க எங்களது வீடு தேடி வரும் எம்எல்ஏ-க்கள், எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்யும்போது மக்களின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டும், அவரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது,” என அங்கிருந்த ஒருவர் கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன், சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதையும் ஆட்சியையும் சம்மந்தப்படுத்த கூடாது என கூறினார். கட்சியில் பிளவு ஏற்பட்டு அதனால் ஜெயலலிதாவின் ஆட்சி கலைந்து விட கூடாது என்பதால், தான் சசிகலா அணியை ஆதரித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், மறு தேர்தலுக்கு இது சரியான நேரம் அல்ல என குறிப்பிட்டார்.

முன்னதாக ‘மட்டன் பாயா குடுத்து மட்டையாக்கிடுறாய்ங்க’ என்று கூவத்தூர் சொகுசு விடுதியில் சத்யநாராயணன் கூறும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close