[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

குடித்துவிட்டு மகன் ரகளை.... 'மகனை கொன்ற தந்தை'..!

father-killed-son

ஈரோடு மாவட்டத்தில், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கல்லால் அடித்து தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலராமணியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டல் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவரது திருமணமாகாத இளைய மகன் ஜெகநாதன் என்பவர் இறைச்சிக்கடைக்கு வேலை சென்றுகொண்டும் பகுதி நேரமாக இருசக்கர வாகனப்பழுது நீக்கும் தொழிலும் செய்துவருகிறார். இவர் மதுபோதைக்கு அடியாகியுள்ளதால் தினமும் மது அருந்திவந்து தனது தந்தை மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் ஜெகநாதன் இன்று அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு தனது தந்தையை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்க முற்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தந்தை மாரியப்பன் அவரது தாக்குதலைத்தடுக்க அருகில் இருந்த கல்லை எடுத்து திருப்பி தாக்கியுள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராது விதமாக மாரியப்பன் தாக்கிய கல் ஜெகநாதனின் தலையில் பட்டு பெருங்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகநாதன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஜெகநாதன் உயிரிழந்து தெரிந்து கோபி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல்பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close