[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

கோவை விமானநிலையத்தில் 58 லட்சம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

coimbatore-airport-money-seized

கோவை விமானநிலையத்தில் நைஜீரியாவைச் சேர்ந்தவரிடமிருந்து 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக விமானத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டெல்லியில் இருந்து கோவை வந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அந்த விமானத்தில் வந்த நைஜீரியாவை சேர்ந்தவரை புலனாய்வுத்துறையினர் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரிடமிருந்து 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான புதிய 500 ரூபாய் நோட்டுகளும், 5 லட்சத்து 5ஆயிரம் மதிப்புடைய பழைய 500 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை ரேஸ் கோர்ஸிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து நைஜீரிய நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close