[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்பு

girija-vaidyanathan-sworn-as-new-tn-chief-secretary

தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த, ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதனையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் அறிவிக்கப்பட்டார். மேலும் ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்புகளையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிக்க உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close