[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடி

salem-co-operative-bank-fraud

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் போலியாக ஏராளமான கணக்குகள் தொடங்கியது அம்பலமாகியுள்ளது.‌

இந்த கணக்குகள் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய‌ ரூபாய் நோட்டுகள் டெபாசிட்‌ செய்யப்பட்டிருக்கலாம் என வருமானவரித் துறை சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கும் வருமான வரித் துறை அதிகாரிகள், முக்கிய நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை, வருமான வரித் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய கூட்டுறவு வங்கிக்கு கீழ் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் 64 வங்கிகளைச் சேர்ந்த மேலாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். முடிவில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. வங்கியில் போலி கணக்குகள் தொடங்கி, 150 கோடி ரூபாய் அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றியதும் தெரிய வந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close