[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

பிரதமரைச் சந்தித்து நிதி பெற வேண்டும்: முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

stalin-request-to-cm

முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து முதல் கட்டமாக தமிழகத்திற்கு 10 ஆயிரம் கோடி நிதி பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழுவினை வரவழைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். புயல் பாதிப்பு குறித்து கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருக்காமல், பிரதமரை நேரில் சந்தித்து பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து முதல்கட்டமாக தமிழகத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதியைப் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக கொண்டுள்ளார்.
வர்தா புயலால் வரலாறு காணாத அளவிற்கு 10,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டு அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்றி கொள்ள முடியாமல் மூன்று மாவட்ட மக்களும் தவித்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் வாரியத்திற்கு இந்த புயலால் மேலும் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ள ஸ்டாலின், நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகளுடன் திமுகவினர் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொளத்தூரில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிப் பொருள்களை வழங்கினார். இதையடுத்து கொளத்தூரில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்ட அவர் அங்கு மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close