[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் வங்கியில் போதிய பணம் இல்லை.. வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

not-enough-money-in-bank-customers-affected

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நேற்று தளர்த்திய போதிலும் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப விநியோகம் செய்ய வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் உள்ளது.

கடந்த 8-ஆம் தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்து பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் குவிந்தனர். மேலும், வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் நேற்று வரை வாரத்திற்கு ரூ.24,000 வரையும், ஏடிஎம்-மில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.2,500-ம் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், இன்றிலிருந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தை எவ்வளவு வேண்டும் என்றாலும் வங்கிகள் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அவ்வாறு, வங்கிகளில் இருந்து எடுக்கும் பணத்தை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது.

ரிசர்வ் வங்கி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும் தமிழகத்தில் பெரும்பாலான வங்கிகளில் மக்களுக்கு கொடுக்க போதுமான பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே பெரும்பாலான வங்கிகளில் கிடைப்பதால் மக்களும் சில்லறை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இன்றிலிருந்து தங்களது பணத்தை விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் காலையிலேயே வங்கி சென்ற வாடிக்கையாளர்கள், வங்கியில் பணம் இல்லை என்று கூறப்பட்டதையடுத்து ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close