[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

3 தொகுதி தேர்தலை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள்..

special-arrangement-in-secretariate-to-monitor-3-constituency-election

தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவை கண்காணிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன் ஒருபகுதியாக தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து கொண்டே வாக்குப்பதிவு மையங்களில் பதிவாகும் வாக்குகள் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிகளில் பிரச்னைகள் ஏற்படுகிறதா? அவ்வாறு பிரச்னை ஏற்பட்டால் அதனை எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுத்து களைவது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.

3 தொகுதிகளிலும் மொத்தமாக 812 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 625 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரிடையாக கண்காணிக்ப்படுகிறது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் முழுவதும் வீடியோக பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவிகிதமும் அறிவிக்கப்படு வருகிறது.

தேர்தல் பார்வையாளர்களை பொறுத்தவரை பொதுப்பார்வையாளர்கள், காவல்துறை பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிந்து தங்களது பணிகளை மேற்கொண்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் மொத்தமாக 39 பார்வையாளர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close