[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

தஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி வரை 15% வாக்குப்பதிவு

thanjavur-election-updates

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தின் தஞ்சாவூர் தொகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 15% வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது.

தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கம் சவுராஸ்டிரா, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதியில் 2,68,516 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதால் வாக்காளர்கள் வசதிக்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 317 வாக்குப் பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன உள்ளன. வாக்குச்சாவடியில் பணியாற்ற 1472 பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகலும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி, பாஜக சார்பில் ராமலிங்கம், தேமுதிக சார்பில் அப்துல்லா சேட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close