[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் சூடு பறக்கும் 'டிரம்ப் தோசை'

served-hot-a-donald-trump-dosa-in-chennai

சென்னையில் உணவகம் ஒன்றில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தோசை பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்ட் டிரம்ப். இவர் வரும் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். இவரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள ஒரு உணவகம் டிரம்பின் பெயரில் தோசை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

‘டிரம்ப் தோசை’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த தோசையை வாடிக்கையாளர்கள் பலர் ‘வெள்ளை தோசை’எனக்கேட்டு உண்டு மகிழ்கின்றனர். இந்த தோசையின் விலை ரூ.50க்கு விற்பனையாகிறது. வாழை இலையில் மொறுவலாக செய்யப்பட்ட தோசையுடன், ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட சட்னி, சாம்பார் மற்றும் நெய் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அந்த உணவகத்தை நடத்தி வரும் முகுந்த் தாஸ் கூறுகையில், ‘ஒரு ஓவிய கலைஞராக இருந்தால் அவர்களுக்குப் பிடித்தவர்களை ஓவியமாக வரைந்து மாரியாதை செலுத்துவார்கள். நானோ உணவக உரிமையாளர். எனவே புதுவகை உணவை அறிமுகப்படுத்தி, அதற்கு தனக்குப் பிடித்த நபரான டிரம்ப் பெயரை வைத்துள்ளேன். முதலில் சூடு பிடிக்காத வியாபாரம் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 130 தோசைகள் விற்பனையாகிறது. டிரம்ப் பெயருக்காக இந்த விற்பனையா..? அல்லது தோசையின் ருசிக்காக இந்த வரவேற்பா..? என்பது தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close