[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பயிர் விளையாத அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி

one-more-farmer-died-in-delta-district

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நீரின்றி நெற்பயிர்கள் விளையாத காரணத்தால் மனமுடைந்து விவசாயி உயிரிழந்தாக வட்டாட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

வேதாரண்யம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்ற விவசாயி கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன்பாக 2 முறை நெல் பயிரிட்டிருந்தார். மழை இல்லாததால் ‌பயிர் விளையவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகக் கடன் பெற்று மீண்டும் நெல் நடவு செய்தார். ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தால் மீண்டும் பயிர் விளையவில்லை. இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் தனது விவசாய நிலத்தில் நேற்று திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விவசாயி ரத்தினவேல் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close