[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்த ராகுல்...

rahul-gandhi-joins-tn-congress-leaders

ஆளுக்கொரு திசையாக தோற்றம் அளித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்த பெருமை ராகுலுக்கு கிடைத்துள்ளது. டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் இப்படித்தான் பார்க்கப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியையும் கோஷ்டி பூசலையும் பிரிக்க முடியாது என்பது காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாறு. அதுபோல் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து இளங்கோவன் விலகிய பிறகு நீண்ட இழுபறிக்கு பின் திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் கட்சியில் நடந்த பல நிகழ்வுகள் எதிலும் ஈவிகேஎஸ் பங்கேற்கவில்லை. குறிப்பாக கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த உண்ணாவிரதம், கடந்த மாதம் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டம் உட்பட சமீபத்தில் சத்திய மூர்த்தி பவனில் நடந்த எந்த நிகழ்விலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்கவில்லை.

ராகுல் காந்தி கைது சம்பவத்துக்கு பிறகு, திருநாவுக்கரசர் உடன் ஒரே மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று பங்கேற்றார். இதேபோல் நக்மா, குஷ்பு, கார்த்தி சிதம்பரம் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்,கடந்த காலத்தில் இருந்தது போன்று தொண்டர்கள் கூட்டம் இல்லை என முரண்பாடாக தான் பேசினார். அதேபோல் கட்சியில் கோஷ்டி பிரச்சனை இருந்தபோது வெளிப்படையாக பேச முடியாமல் இருந்த திருநாவுக்கரசர் இன்று பல முக்கிய நிர்வாகிகள் இருந்த மேடையை பயன்படுத்தி கட்சியில் கோஷ்டி பிரச்சனை இல்லை என்றே தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய வழிகாட்டி, நாளைய பிரதமர் என ராகுலை முன்னிறுத்தும் தொண்டர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி உற்சாகத்தில் இருக்கிறார்கள். கட்சியில் விளையாட்டு, மருத்துவ அணி தொடங்க நினைப்பதும், மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை ஒன்றிணைக்கவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை எப்படி சந்திக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close