[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே கருத்து முரண்பாடு?

clash-with-people-welfare-front-leaders

காவிரி விவகாரத்தில் திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் கடந்த 7-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதேபோல்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி.க்கள், குடியரசுத் தலைவரையும் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

இதனையடுத்து, காவிரி விவகாரத்தில் வரும் 25-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சிகளுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் காவிரி பிரச்னையில் தி.மு.க நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என்று, அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று அறிவித்தார். ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என, மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார். இதனால், கூட்டணி தலைவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, மக்கள்நலக் கூட்டணி தலைவர்களிடேயை எந்தவித முரண்பாடும் இல்லை என தெரிவித்தார். இருப்பினும்,திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திருமாவளவன் கூறிய கருத்துக்கு அவர் நேரடியாக எந்தப் பதிலையும் கூறாமல் சென்றுவிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close