[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

என்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் - விராட் கோலி

india-vs-south-africa-virat-kohli-calls-wriddhiman-saha-world-s-best-keeper-as-rishabh-pant-is-axed-for-1st-test

தன்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் என்று கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நீண்ட காலமாக ஜொலித்து வந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வினை அறிவித்தார். அப்போது முதல் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பணிக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தோனியை அடுத்து டெஸ்ட் அணிக்கு ரித்திமன் சாஹா விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு வந்தது. அப்போதெல்லாம் அவருக்கு பதிலாக பார்த்திவ் பட்டேல் களமிறங்கினார். சாஹாவின் பேட்டின் மிகவும் சிறப்பானதாக இல்லை. இருப்பினும், நிரந்தமாக ஒரு விக்கெட் கீப்பர் இல்லாமல் இந்திய அணி தடுமாறியது.

              

இந்த நிலையில், இந்திய அணிக்கு புதுவரவாக கிடைத்தவர் ரிஷப் பண்ட். சாஹா காயத்தால் ஓய்வுப் பெற வேண்டிய நிலை ஏற்பட்ட போது, ரிஷப் பண்ட்க்கு கடந்த ஆண்டு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓராண்டிற்கு மேலாக ரிஷப் பண்ட்தான் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்து வந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தொடக்கத்தில் சதம் விளாசி அசத்தினார். தொடக்கத்தில் அவர் அதிரடியாக விளையாடி இருந்த போதும், பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

                          

சாஹா காயத்தில் இருந்து குணமடைந்த பின்னரும் ரிஷப்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் மற்றும் சாஹா இருவரும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சாஹாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டியிலும் லெவன் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால், ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பினார். 

இந்த நிலையில்தான், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக சாஹாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் சாஹா களமிறங்குகிறார்.

                     

இந்நிலையில், சாஹா குறித்து விராட் கோலி கூறுகையில், “சாஹா தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் இந்த தொடரில் விளையாடுகிறார். அவரது விக்கெட் கீப்பிங் எல்லோரும் பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தது துரதிருஷ்டம். என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்” என தெரிவித்தார். இதற்கு முன்பு ரிஷப் பண்ட்தான் இந்திய அணியின் எதிர்காலம் என கூறியிருந்தார்.

              

இந்திய அணியைப் பொறுத்தவரை தற்போதைக்கு மூன்று வகையாக போட்டிகளுக்கும் மூன்று விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கு சாஹா, டி20 போட்டிக்கு ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிக்கு தோனி. இதுதான் தற்போதைய நிலை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close