[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

“அணித் தேர்வாளர்கள் தோனியிடம் பேச வேண்டும்” - சிறுவயது பயிற்சியாளர்

dhoni-still-fit-enough-to-play-international-cricket-childhood-coach

தோனி இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருப்பதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்குப் பின்னர் தோனி ஓய்வை அறிவிப்பாரா ? என்ற பெரும் பேச்சும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை தோனி தரப்பிலிருந்து ஓய்வு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தோனியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான தகவலில், இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இந்திய அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி, “தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் இருக்கிறது. அது எனக்கு தெரியும். சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தோனி இன்னும் உடற்தகுதியுடன் தான் இருக்கிறார். இந்திய அணித் தேர்வாளர்கள் தோனியை அழைத்து பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். சிறுவயது முதலிருந்து இதுவரையிலும் தோனி நன்றாக தான் இருக்கிறார். தோனியின் ஓய்வு குறித்து அவரது நெருங்கிய நண்பர் கூட அறிந்திருக்க மாட்டார். பின்னர் நான் எப்படி அறிந்து வைத்திருக்க முடியும். ஆனால் உலகக் கோப்பையில் தோனியின் பங்கு முக்கியம் வாய்ந்தது” என்று கூறினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close