[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

world-cup-2019-india-won-the-toss-elected-bat-first

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

உலகக் கோப்பைத் தொடரில், இன்று நடக்கும் 40 வது லீக் போட்டியில், இந்தியா -பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வியாக அந்தப் போட்டி அமைந்துவிட்டது. அதை சரிகட்ட இன்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடும். இன்று வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.  

பர்மிங்ஹாமில் இந்த போட்டி நடக்கிறது. இந்திய அணி, நடப்புத் தொ‌டரில் 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்த நிலையில், மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பங்க‌ளாதேஷ் அணி 3 போட்டிகளில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அந்த அணியின் ஒரு போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும், இதுவரை 35 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில் இந்திய அணி 29 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close