அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தங்களின் பணியைத் தொடர்வார்கள் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுவில் ஒற்றை தலைமை வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் குரல்கள் எழுப்பியதை அடுத்து, மறுஅறிவிப்பு வரும்வரை ஊடகம், பத்திரிகைகளில் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செய்தித் தொடர்பாளர்கள் தங்களுடைய பணியைத் தொடரலாம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓபிஸ்-ஈபிஎஸ் கூட்டமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் அதிமுக செய்தி தொடர்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த சசிரேகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று
திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்
ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது