[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

உலகக் கோப்பை: கலக்கலில் நியூசிலாந்து, கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ்!

west-indies-face-rampaging-new-zealand-in-a-must-win-game

நியூசிலாந்து அணியுடன் இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கிறது.

உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் போட்டியில், இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மாலை 6 மணிக்கு மான்செஸ்டரில் நடக்கும் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து, இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 4 ல் வெற்றி பெற்றியுள்ளது. இந்தியாவுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. 9 புள்ளியுடன் உள்ள அந்த அணி, இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பலாம். அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், குப்தில், நீஷம், கிராண்ட்ஹோம் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டி வருகின்றனர். பந்துவீச்சில் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அதிரடி காட்டுகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. இன்றைய போட்டியில் அந்த அணி தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய நிலையில் இருக்கிறது. அதனால் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம்.

அந்த அணியில், சாய் ஹோப், லெவிஸ், பூரன், ஹெட்மையர் ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். ஆனால், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், ஆல் ரவுண்டர் ரஸல் ஆகியோர் இன்னும் அதிரடியை ஆரம்பிக்கவில்லை. அவர்கள் அதிரடி காட்டினால், இன்றைய போட்டியில் அந்த அணி எழுச்சி பெற வாய்ப்பிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close