[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப் 

kuldeep-yadav-denies-his-statement-about-dhoni

தான் தோனி மீது மரியாதை வைத்திருப்பதாகவும், யாரைப்பற்றியும் தான் எதுவும் கூறவில்லை எனவும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்

விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட, இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், போட்டியின் போது வழக்கமாக தோனி கொடுக்கும் ஆலோசனைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த குல்தீப், ''தோனி தேவையில்லாமல் மைதானத்திற்குள் பேசமாட்டார். ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், ஓவர்களுக்கு இடையே பேசுவார். அப்போது அவர் சில டிப்ஸ் கொடுப்பார். அப்படி அவர் சொல்லும் டிப்ஸ் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால், அதை அவரிடம் நாங்கள் சொல்ல முடியாது’’ என்று தெரிவித்ததாக செய்தி பரவியது.

தோனி எடுக்கும் முடிவுகள் பல ஆட்டங்களில் வெற்றியை தேடி தந்திருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் குல்தீப் யாதவ் இவ்வாறு கூறினாரா என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சர்ச்சை குறித்து குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  எந்தக் காரணமும் இல்லாமல் வதந்தியை கிளப்பி ஊடங்கள் புதிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கின்றன. அதனை சிலர் வேகமாக பரப்பி வருகின்றனர். நான் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு. நான் யார் குறித்தும் எதுவும் பேசவில்லை. தோனி மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து கருத்து கூறியதாக குல்தீப் யாதவ் மீது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் அவர்  தற்போது அளித்துள்ள விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close