[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
  • BREAKING-NEWS இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும் மலராது - கி.வீரமணி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்

உலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்?

old-or-young-how-squads-stack-up-in-cricket-world-cup-2019

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கவுள்ளது. இதற்காக எல்லா நாடுகளும் தங்களின் அணிகளை அறிவித்துவிட்டனர். அத்துடன் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளில் எந்த அணி இளம் வீரர்கள் கொண்ட அணி? முதுமையான வீரர்களைக் கொண்ட அணி எது? என்பதை ஆராய்வோம்.

முதுமையான வீரர்கள் கொண்ட அணி:

வரும் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிற இலங்கை அணிதான் அதிக வயதான வீரர்களை களமிறக்கவுள்ளது. இந்த அணியின் சராசரி வயது 29.9 ஆக உள்ளது. இந்த அணியில் லசித் மலிங்கா (35), லக்மல்(32) மற்றும் ஜீவன் மெண்டிஸ்(36), ஆஞ்சலோ மேத்யூஸ் (31) போன்ற அதிக வயது நிரம்பிய வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். 

எனினும் இந்த உலகக் கோப்பையில் அதிக வயதான வீரராக தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர்(40) களமிறங்குகிறார். அதேபோல இலங்கைக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணியின் சராசரி வயது 29.5 ஆக உள்ளது.

இளம் வீரர்கள் கொண்ட அணி:

அதேபோல இந்த உலகக் கோப்பையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியின் சராசரி வயது 27.3 ஆக இருக்கிறது. அந்த அணியை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் சராசரி வயது 27.4 ஆக இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் 19 வயது இளம் வேகபந்து வீச்சாளர்கள் ஷாஹின் ஷா அஃப்ரிதி மற்றும் முகமது ஹஸ்நேயின் களமிறங்குகின்றனர். 

இந்த உலகக் கோப்பையின் இளம் வீரராக ஆஃப்கானிஸ்தானின் முஜுபுர்  ரகுமான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close