[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

டிவில்லியர்ஸ் விளாசல்: பெங்களூரு அணிக்கு 4 வது வெற்றி

de-villiers-stars-as-royal-challengers-bangalore-storm

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 42வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் பார்த்தீவ் படேல், விராத் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

கோலி 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பார்த்தீவ் 24 பந்தில் 43 ரன்கள் எடுத்து முருகன் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

பெங்களூரு அணி 6 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் ஒரு புறம் நிதானமாக விளையாட மொயின் லி 4, நாத் 3 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 81 ரன்னில் பெங்களூர் 4 விக்கெட் இழந்தது. பின்னர், டிவில்லியர்ஸ் உடன் ஸ்டொய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர்.

டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசி நேரத்தில் சிக்சர் மழை பொழிந்தார். ஆட்ட நேர முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.  டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள் குவித்தும் ஸ்டொய்னிஸும் 24 பந்தில் 43 ரன்கள் அடித்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் கே.எல்.ராகு ல் (27 பந்தில் 42 ரன்), கிறிஸ் கெயில் (10 பந்தில் 23 ரன்) மயங்க் அகர்வால் (21 பந்தில் 35 ரன்) பூரன் (28 பந்தில் 46 ரன்) ஆகி யோர் சிறப்பாக ஆடினர். இதனால் 17 வது ஓவர் வரை பஞ்சாப் அணி, வெற்றியின் பக்கம் இருந்தது. ஆனால் அடுத்து பெங்களூரு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி, பஞ்சாப் வீரர்களை சாய்த்தனர். இதனால், 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதையடுத்து 17 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் சைனி 2 விக்கெட்டும் ஸ்டோயினிஸ், முகமது அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அதிரடியாக 82 ரன் குவித்த டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பெங்களூரு அணி பெற்ற 4 வது வெற்றி இது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close