[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

‘தனி ஒருவனாக’ ஆஸ்திரேலியாவை மிரட்டும் கோலி - அசத்தல் சதம்

indvsaus-3rd-odi-virat-kohli-century

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியக் கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கை
வெளிப்படுத்தி, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அந்த அணியில் உஸ்மான் காவஜா 104 (113) மற்றும்
கேப்டன் ஃபின்ச் 93 (99) ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்  47 (31) ரன்கள் எடுத்தர். இந்திய அணி தரப்பில் குல்தீப்
யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 1 (10) மற்றும் ரோகித் ஷர்மா 14 (14) ரன்களில்
விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த கோலி நிலைத்து ஆடினார். ஆனால் இடையே வந்த அம்பத்தி ராயுடு 2 (8) ரன்கள் மட்டுமே
எடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த தோனி கோலியுடன் சற்று நேரம் ஜோடி சேர்ந்து விளையாடி, பின்னர் 26 (42) ரன்களில் விக்கெட்டை
இழந்தார். அதன்பின்னர் வந்த கேதர் ஜாதவ் 26 (39) ரன்னில் அவுட் ஆகினார். ஆனால், நிலைத்து விளையாடிய கோலி ‘தனி ஒருவனாக’ சதம்
அடித்து ஆஸ்திரேலியாவை மிரள வைத்தார். கடந்த போட்டியிலும் அவர் ‘தனி ஒருவனாக’ சதம் 102 (86) அடித்து, அணியை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close