[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

nzvind-2nd-odi-india-wins-the-toss-and-elects-to-bat-first

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ‌ஷமி, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் சிறப்பாக வீசி, நியூசிலாந்தை 157 ரன்னில் சுருட்டினர். பேட்டிங்கிற்கு சாதகமான அந்த பிட்சில் நியூசிலாந்து அணி 300 ரன்னுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி, சுருட்டப்பட்டது. அதே போல இன்றைய போட்டி நடக்கும் மைதானமும் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இந்தப் போட்டியிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியின் வெற்றி தொடரும். 

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலம் வாயந்த அணிதான். கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள். இந்த மைதானத்தில் இதற்கு முன், இலங்கைக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அணியே, இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது.   நியூசிலாந்து அணியில், சுழற்பந்துவீச்சாளர் சன்ட்னர், வேகப்பந்துவீச்சாளர் சவுதி நீக்கப்பட்டு, சோதி, கிராண்ஹோம் திரும்பியுள்ளனர்.  

அணி விவரம்: 
ரோகித் சர்மா, தவான், விராத் கோலி (கேப்டன்), ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், சாஹல்.

நியூசிலாந்து: கப்தில், முன்றோ, கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்றி நிகோல்ஸ், கிராண்ட்ஸ்ஹோம், சோதி, பெர்குசான், பிரேஸ்வெல், போல்ட். 

முன்னதாக இங்கு வந்த இந்திய அணிக்கு,மவுரி பழங்குடி சமூகத்தினரின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close