[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

3வது டெஸ்ட்:மெல்போர்னில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!

indian-cricket-team-s-warm-up-and-exercise-session-in-melbourne

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் மெல்போர்ன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.  தொடர் 1-1 என்று சமநிலையை எட்டியுள்ளதால், மெல்போர்னில் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் 3 வது டெஸ்ட் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இங்குதான், முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடந்தது. இந்திய அணி மெல்போர்னில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 2 போட்டியில் வெற்றியும், 8 போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டியில் டிராவையும் சந்தித்துள்ளது.

மெல்போர்னில் இந்திய அணி வெற்றி பெற்று 37 வருடமாகிவிட்டது. 2014 ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி ‘டிரா’ செய்தது. விராத் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் வென்று அந்த வரலாறை மாற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

கிறிஸ்துமஸூக்கு மறுநாள் நடக்கும் இப் போட்டியை ’பாக்சிங் டே’ டெஸ்ட் என்கிறார்கள். இந்த போட்டியை எப்படியாவது வெல்ல இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால், மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதோடு அணியில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் மெல்போர்ன் மைதானத்தில் இன்று வலை பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close