[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை'

prithvi-shaw-to-miss-perth-test-another-chance-for-kl-rahul-and-murali-vijay-to-shine

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரித்வி ஷாவுக்கு காயம் முழுமையாக குணமடையாததால் இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுலுக்கும், முரளி விஜய்க்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. புஜாரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, பங்கேற்பதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. 

ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரை, முரளி விஜய்-க்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டின் அருகே வந்த பந்தை பிடிக்க முயன்றபோது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
அவரால் நடக்க முடியவில்லை. அவரை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயம் அதிக மாக இருப்பதால் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் குணமாகிவிட்டார் என்று கூறப்பட்டது. பெர்த்தில் இந்திய அணி மேற்கொண்ட பயிற்சியின் போது அவர் கலந்துகொண்டார். அவர் ஜாக்கிங்கும் சென்றார். இதனால் அவர் கணுக்கால் குணமாகிவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது காயம் முழுமையாக குணமாகாத காரணத்தால் இரண்டாவது போட்டியில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இதனையடுத்து பெர்த்தில் பங்கேற்கும் 12 வீரர்கள் பட்டியலை நாளை வெளியிடும். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் 2 ரன்னும், முரளி விஜய் 11 ரன்னும் எடுத்தனர். 2 வது இன்னிங்ஸில் ராகுல் 44 ரன்னும் முரளி விஜய் 18 ரன்னும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close