[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை

சூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும் விசாரணை!

pcb-might-start-fresh-inquiry-against-danish-kaneria

சூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியா மீது ஊழல் தடுப்புப் பிரிவு மீண்டும் விசாரணையை தொடங்க இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 34.8. பத்தொன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இவர், இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு ஆடியபோது ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் இது உறுதியானது. இதையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆயுள் காலத் தடை விதித்தது.  ஆனால் கனேரியா, ’தான் தவறுசெய்யவில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது’ என்று கூறி வந்தார்.

அனு பட் என்ற இந்திய தொழிலதிபர் 2007-ம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர்கள் சிலரை அழைத்து விருந்து வைத்து விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வெஸ்ட்பீல்டை, அனு பட்டிற்கு கனேரியா அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, டர்ஹம் அணிக்கு எதிராக குறிப்பிட்ட ஓவரில் 12 ரன்களை வாரி வழங்க வேண்டும் என்ற ஸ்பாட் பிக்சிங்கில் வெஸ்ட்பீல்ட் ஈடுபட்டார். அதற்காக ஆறாயிரம் பவுண்ட் தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை வெஸ்ட் பீல்டு ஒப்புக்கொண்டதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் கைதான கனேரியா தன் தவறை ஒப்புக்கொள்ளாததால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த குற்றச்சாட்டை இப்போது ஒப்புக்கொண்டுள்ளார் கனேரியா. அல்ஜஸீரா சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘நான் தவறு செய்தது உண்மைதான். நான் இதை என் அப்பாவுக்காகத்தான் இவ்வளவு நாள் மறுத்துவந்தேன். அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவர் உடல் நாளுக்கு நாள் மோசமானது. அந்த நேரத்தில் இந்த விஷயத்தை அவரிடம் கூற தைரியம் வரவில்லை. அவர் என் மீது அதிக பெருமை கொண்டிருந்தார். பாகிஸ்தானுக்காக விளையாடுவதற்காக இன்னும் பெருமை கொண்டிருந்தார். அவரிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்தான் எனக்கு ரோல் மாடலாக இருந்தவர். நான்தான் அனுபட்டிடம் வெஸ்ட்பீல்டை அறிமுகம் செய்து வைத்தேன். அனுவின் ஆசை வார்த்தை காரணமாக, சூதாட்டத்தில் ஈடுபட அவர் ஒப்புக்கொண்டார். அனு பட் குறித்து நான் கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டேன். பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது. இப்போது இதை சொல்லும் வலிமையை பெற்றுவிட்டேன்’ என்று கூறியிருந்தார். 

இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்புப் பிரிவினர் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கனேரியா சூதாட்டத்தில் ஈடுபட்டதை இப்போது ஒப்புக்கொண்டது சீரியசான விஷயம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹசான் மணியும் சட்ட நிபுணர்களுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவினருடனும் இந்த வாரம் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கனேரியாவிடம் மீண்டும் விசாரணை நடைபெற இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close