[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

பாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை!

kabaddi-coach-accused-of-molesting-13-year-old-hangs-himself

பாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் ஓட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் ருத்ரப்பா வி ஹோசாமணி (59). மூத்த கபடி பயிற்சியாளரான இவர், பெங்களூர் விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 9 ஆம் தேதி கபடி பயிற்சி மையத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்து 13 வயது சிறுமி இருவர் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார். அவர் தனக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லைக் கொடுத்தாகப் பெற்றோரிடம் கூறினார். அப்போது அந்த மையத்தில் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவர் மீது விளையாட்டு ஆணையத்தில் புகார் செய்தனர். இதனால் அவர் கடந்த வாரம் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸூம் கொடுக்கப் பட்டிருந்தது. போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய ஹோசாமணி, தேவநகரியில் உள்ள ஹரிஹர் நகரில் உள்ள  ஒரு ஓட்டலில்  அறை எடுத்து தங்கினார்.  அறையில் இருந்து அவர் நாள் முழுவதும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த அறையில் இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தனது மனைவி ரேணுகாவுக்கும் மகன் ராகேஷூக்கும் எழுதியுள்ளார். ‘அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இதுதான் காரணம்’ என்று கூறியுள்ளார்.

மகனுக்கு என்று குறிப்பிட்டு, ‘அம்மாவை பார்த்துக்கொள். எனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்’ என்று தெரிவித் துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close