[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா?’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத்

england-v-india-james-anderson-breaks-glenn-mcgrath-s-record-in-hosts-win

இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியா உடனான லண்டன் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியை ஆட்டமிழக்கச் செய்தபோது, ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத்தின் சாதனையை ஆண்டர்சன் முறிடியத்தார். இதுவரை, 143 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 564 விக்கெட்களை வீழ்த்தியுள்‌ளார்.

Read Also -> குல்தீப் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அபார வெற்றி  

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 800 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரை அடுத்து ஷேன் வார்னே 708, கும்ளே 619 விக்கெட்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 564 விக்கெட்களுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  563 விக்கெட்களுடன் மெக்ராத் 5வது இடத்தில் உள்ளார். 

Read Also -> கே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா

          

அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தது குறித்து ஆண்டர்சன் கூறுகையில், “நான் அழாமல் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு இது மிகவும் சிறப்பு வாந்த சாதனை. இதுநான் இதுவரை செய்திராத ஒன்று. இங்கிலாந்து அணிக்காக மகிழ்ச்சியுடன் நான் விளையாடுகிறேன். அது ஒரு அற்புதமான பணி” என்றார். 

Read Also -> 'கடவுளின் தேசம் அழியும்' என முன்பே எச்சரித்த சமத்வம்! 

            

தன்னுடைய சாதனையை ஆண்டர்சன் முறியத்தது குறித்து மெக்ராத் கூறுகையில், “ஆண்டர்சன் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். என்னுடைய சாதனையை அவர் கடந்துவிட்டார். அவரது அடுத்த இலக்கு 600 விக்கெட். ஆண்டர்சனால் 600 விக்கெட் எடுக்க முடிந்தால், அது வியக்கதகு முயற்சியாக தான் இருக்கும். அவருக்கு விருப்பம் இருக்கும் வரை அவர் விளையாடலாம். முதல் இடங்களில் ஸ்பின்னர்கள் தான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் கும்ளேவின் 619 விக்கெட்களையாவது கடக்க வேண்டும்” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close