[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஆசிய கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு: ரோகித் சர்மா கேப்டன், சுரேஷ் ரெய்னா அவுட்!

virat-kohli-rested-rohit-sharma-to-lead-india-at-asia-cup

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான. 16 பேரைக் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராத் கோலிக்கு ஓய்வளிக்கப் பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாகச் செயல்படுகிறார்.

14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்கி  28 ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

Read Also -> விராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்!  

முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோதுகின்றன. செப்டம்பர் 19 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது, பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள், தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடந்தது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் கூடி வீரர்களை தேர்வு செய்தது. இதில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற விராத் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடரில் இடம்பிடிக்காத கேதர் ஜாதவ் அணிக்கு திரும்பியுள்ளார். மோசமான பார்ம் காரணமாக சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ராஜஸ்தானை சேர்ந்த இளம் மித வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), தவான் (து.கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர் திக் பாண்ட்யா, குல்திப் யாதவ், சேஹல், அக்‌ஷர் படேல், புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close