[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

இங்கிலாந்தில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களின் கனவு: விஹாரி மகிழ்ச்சி

test-cricket-is-every-cricketer-s-dream-hanuma-vihari

’ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது’ என்று இந்தி ய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி இருக்கிற ஹனுமா விஹாரி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது போட்டியில் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவானும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ராவும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷாப் பன்டும் களமிறக்கப்பட்டனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையும் படிங்க:விஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை!

இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிருத்வி ஷா, காக்கிநாடாவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

63 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள விஹாரி, 15 சதங்களுடன் 5132 ரன்களை குவித்திருக்கிறார். அவரது சராசரி 59.79. இந்திய அணிக் கு தேர்வு செய்யப்பட்டது பற்றி விஹாரி கூறும்போது, ‘ இந்திய அணிக்கு தேர்வான செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரி யமாகவும் இருந்தது. ஏனென்றால் கண்டிப்பாக இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். கடந்த சில வருடங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். அதற்கான பலன் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. அது கிடைத்திருக்கிறது. ஒவ் வொரு கிரிக்கெட் வீரருக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட்  விளையாடுவது கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது. அது கிரிக்கெட்டுக்கான சிறப்பு இடம். இந்திய ஏ அணியுடன் அங்கு சென்று விளையாடி இருக்கிறேன். அந்த நாட்டின் கண்டிஷனுக்கு தகுந்தாற்போல் ஆட என்னால் முடியும். என்னை ஊக்கப்படுத்தி, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு, நிச்சயம் நியாயமாக இருப்பேன்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close