[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..!

serena-williams-wanted-italian-food-so-her-husband-whisked-her-to-italy

இத்தாலி உணவுக்கு ஆசைப்பட்ட செரினாவை இத்தாலிக்கே அழைத்துச் சென்று அசத்தியுள்ளார் ஆசை கணவர் அலெக்சிஸ் ஒஹானியம்.

டென்னிஸ் உலகம் மறக்க முடியாத பெயர் செரினா வில்லியம்ஸ். ஏகப்பட்ட கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரரான அவர், கடந்தாண்டு அலெக்சிஸ் ஒஹானியம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. அறுவை சிகிச்சை மூலம்தான் செரினாவிற்கு குழந்தை பிறந்தது. ஆனாலும் குழந்தை பிறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸில் உற்சாகத்துடன் பங்கேற்றார். தனது விடா முயற்சியால் இறுதிப் போட்டி வரை சென்ற செரினா, ஜெர்மனியை சேர்ந்த ஆஞ்செலிக் கெர்படரிடம் தோல்வியடைந்தார்.

(அட இதையும் கூட படிக்கலாமே...) 'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்'

செரினாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நேரத்திலும் சரி.. அதன் பின் அவர் போட்டிகளில் பங்கேற்ற நேரத்திலும் செரினாவை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டது அவரது கணவர் அலெக்சிஸ் ஒஹானியம் தான். ஒவ்வொரு போட்டியின்போதும் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொண்டவர் அவர். விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு செரினாவின் மீது அவர் வைத்துள்ள அளவுக் கடந்த அன்பை வெளிப்படுத்தியிருந்தது.  "எங்கள் குழந்தை பிறந்த அடுத்த நாள், என் மனைவியை முத்தமிட்டு "போய்வா" என அறுவைச் சிகிச்சைக்கு அனுப்பினேன். அப்போது எங்கள் இருவருக்குமே தெரியாது அவள் உயிரோடு திரும்பி வருவாரா என்று, அவள் உயிரோடு இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்தேன், இப்போது அவள் விம்பிள்டன் இறுதியில்" என பதிவிட்டிருந்தார்.

செரினா மற்றும் குழந்தை மீது அதிகப்படியான காதல் கொண்டுள்ள அலெக்சிஸ் ஒஹானியம், அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கூட பார்த்து, பார்த்து நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில் செரினாவிற்கு இத்தாலி உணவு வகைகளை சாப்பிட ஆசை வந்துள்ளது. உடனே அதை தனது ஆசை கணவரிடம் அன்பாக சொல்லியுள்ளார். மறு பேச்சில்லை. ‘இத்தாலி உணவு தானே வேண்டும். வா.. இத்தாலிக்கே செல்வோம்’ என அலெக்சிஸ் சொல்ல.. அடுத்த நிமிடமே குழந்தையுடன் மூவராக இத்தாலிக்கு கிளம்பிவிட்டனர். தன் மனைவி செரினா எது ஆசைப்படுகிறாரோ அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என நினைப்பவர் அலெக்சிஸ். அதனால்தான் இத்தாலி உணவுக்கு ஆசைப்பட்ட மனைவி செரினாவை இத்தாலிக்கே அழைத்துச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புகைப்படத்துன் பதிவிட்டுள்ள அலெக்சிஸ், “ இத்தாலி உணவுக்கு ஆசைப்பட்டார்.. அதனால் இங்கே..” என கூறியுள்ளார். இதனையடுத்து ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிகிறது. செரினா கொடுத்து வைத்தவர் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலரோ, நீண்ட காலம் காதலும் அன்பும் நிலைத்திருக்கட்டும் என வாழ்த்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close