[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

தோனிக்கும் வயசாகுதுல்ல...

ms-dhoni-not-the-same-person-he-was-age-catching-up-with-him-sehwag

’பழைய மாதிரி தோனியை பார்க்க முடியாது. அவருக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதில் முன்னாள் கேப்டன் தோனி, 2 வது போட்டி யில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் இந்த நிதானமான ஆட்டம் கடும் விமர்ச னத்துக்கு உள்ளாகி வருகிறது.

அவரது ஆட்டம் பற்றி பேசிய கவுதம் காம்பீர்,  ’தோனி, களத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அதிகமான டாட் பந்துகளை சந்திக்கிறார். சில பந்துகளை அடிப்பதில் தடுமாற்றம் தெரிகிறது. தோனி இப்படி ஆடுவது, பின்னால் வருகிற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தையே கொடுக்கும். அவர் பந்துகளை வீணடிக்காமல், வேகமாக ஆட வேண்டும்’ என்றார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் கடந்த ஒரு வருடமாக தோனி, போதுமான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வில்லை என்று குறை கூறியிருந்தார்.

’தோனியின் ஆட்டத்தைப் பார்த்தபோது, இதே மைதானத்தில் (லார்ட்ஸ்) நான் 136 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்தது ஞாபகத்துக்கு வந்தது’ என்று சுனில் கவாஸ்கர் கிண்டல் செய்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கும் தன் பங்குக்கு சில காரணங்களைச் சொல்லியிருக்கிறார்.’பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததுதான் தோல்விக்கு காரணம். ரோகித் சர்மா, தவான், விராத் கோலி, தோனி ஆகியோரில் யாராவது ஒருவர் நின்று ஆடியிருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் வீசவில்லை. ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் புவனேஷ் வர்குமார். அவர் முழுமையாக உடல் தகுதி பெறும் முன்பே அந்தப் போட்டியில் ஆட வைத்துள்ளனர். அவர் ஏழு ஓவர் வீசியும் விக்கெட் கிடைக்கவில்லை. இங்கிலாந்தின் மோர்கன், ரூட் ஆகியோர் குல்தீப், சேஹல் பந்துவீச்சை எதிர்கொள்ளப் பழகிவிட்டனர். 


 
தோனி, முன்பு இருந்தது போல இளைஞராக இல்லை. அவருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தோனி, பொறுப்பேற்று அணியைக் கடைசிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏராளமான டாட் பந்துகளை அவர் ரன்களாக மாற்றி இருக்க வேண்டும்’ என்றார்.

இவர்கள் என்னதான் சொன்னாலும் 2019 உலகக் கோப்பைவரை தோனி அணியில் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close