[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்: அல்ஜசீரா தகவல்!

india-v-s-sri-lanka-test-match-in-july-2017-was-fixed-claims-report

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இலங்கையில் கடந்த வருடம் நடந்த டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக அல்ஜசீரா (Al Jazeera) தெரிவித்துள்ளது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த வருடம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டெஸ் ட் , ஒரு நாள் போட்டி, டி20 தொடர் ஆகியவற்றை மொத்தமாக வென்றது. இந்த இரு அணிகளுக்கும் காலேவில் நடந்த மூன்றாவது டெஸ் ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டி பிக்ஸ் செய்யப்பட்டது என்றும் இதே மைதானத்தில் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியும் பிக்ஸ் செய்யப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. ரகசியமாக படமாக்கப் பட்டுள்ள வீடியோவில் இந்த தகவல்கள் வெளியாகி இருப்பதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

 மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ் என்பவர் பிட்ச்-சை இந்திய அணியினருக்கு சாதகமாக மாற்றும்படி காலே மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் தாரங்கா இண்டிகாவிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் பேட்டிங் அல்லது பவுலிங் என எதற்கு சாதக மாகவும் மாற்ற முடியும் என்று கூறியதாகவும் அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பேட்டிங் பிட்சாகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பவுலிங் பிட்சாகவும் இந்த மைதானம் மாற்றப்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இது, கிரிக்கெட்’ஸ் மேட்ச் பிக்சர்ஸ் (Cricket's Match-Fixers) என்ற தலைப்பில் அல்ஜசீராவில் வெளியாக இருப்பதாகவும் நாளை காலை 10 மணிக்கு இதை ஆன்லைனில் பார்க்க முடியும் என்றும் தகவல் வெளி யாகியுள்ளது.

இந்த மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுப் பற்றி ஐசிசி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close