[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தோல்வியை ஜீரணிக்க முடியலை: தினேஷ் கார்த்திக் வருத்தம்

it-s-hard-to-digest-dinesh-karthik

ஐதராபாத் அணியுடன் அடைந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.

கடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில் பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதி சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ரஷித் கான், சஹா தலா 34 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் அந்த அணி தோல்வி அடைந்தது. ஐதராபாத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது ஐதராபாத் அணி. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அந்த அணி எதிர்கொள்கிறது. 

தோல்விக்குப் பின் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. நாங்கள்  தொடர் முழுவதும் சிறப்பாகவே விளையாடினோம். இந்தப் போட்டியில் தோற்றது சிறப்பானதாக இல்லை. சேஸிங்கை தொடங்கும் போது, போட்டி எங்கள் பக்கமே இருந்தது. ஆனால், சில மோசமான ஷாட்களும் ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டியை மாற்றிவிட்டது. நான், நிதிஷ், ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலம் வெற்றியை நோக்கிச் செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார். இந்தத் தொடரில் நிறைய பாசிட்டிவான விஷயங்களும் நடந்துள்ளன. இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது அணிக்கு சிறப்பாக அமையும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close