[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

ஐபிஎல் கிரிக்கெட்: 5-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இண்டியன்ஸ்

ipl-cricket-mumbai-indians-beat-pune-by-8-wickets

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

புனேவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரைசிங் புனே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 45 பந்துகளில் 57 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 23 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய மும்பை அணி, 2 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் 19-ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் ரோகித் ஷர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்த மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close