[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும்: சென்னை அணி நிர்வாகம்

chennai-super-kings-important-updation

ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி  சென்னையில் நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளது. 2ஆண்டு தடைகளுக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. சில அரசியல் அமைப்புகள் சேப்பாக்கம் மைதானத்திற்கு கருப்பு உடை அணிந்து சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க உள்ளதாக கூறினர்.இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகள் இடம் மாறும் என்ற தகவலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கும் என சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close