[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

வில்லியம்சன் சதம் வீண்: இங்கிலாந்து திரில்லிங் வெற்றி!

england-won-by-4-runs

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி திரில்லிங் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் நியூசிலாந்தும்  இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிப்பெற்றன. மூன்றாவது போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 234 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மோர்கன் அதிகப்பட்சமாக 48 ரன்களும் ஸ்டோக்ஸ் 39 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளும் போல்ட் 2 விக்கெட்டுகளும் கிராண்ட்ஹோம், சவுதி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். மூன்று பேர் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியில் குப்திலும் முன்றோவும் களமிறங்கினர். வந்த வேகத்திலேயே வோக்ஸ் பந்தில், குப்தில் அவுட் ஆனார். அடுத்து முன்றோவுடன் இணைந்தார் கேப்டன் வில்லியம்சன். 49 ரன்களில் முன்றோ ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் நேர்த்தியான பந்துவீச்சில் அடுத்த வந்தவர்களும் அடுத்தடுத்து அவுட் ஆக, நிலைத்து நின்று விளையாடிய வில்லியம்சன் அபார சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த சன்ட்னர் 41 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆக, போட்டியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. 

கடைசி ஓவரில் நியூசிலாந்துக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் கிடைக்கவில்லை. இரண்டாவது பந்தில் இரண்டு ரன் எடுத்த வில்லியம்சன் முன்றாவது பந்தை சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் ரன் கிடைக்கவில்லை. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி பந்தை யார்க்கராக வீசினார் வோக்ஸ். அதை அடிக்க முடியாததால் ரன் கிடைக்கவில்லை. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. வில்லியம்சன் 112 ரன்கள் எடுத்தார். 

இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close