[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

ஜிம்மில் கோச்சாக மாறிய அனுஷ்கா சர்மா!

anushka-sharma-who-has-become-koch-in-jim

கேப்டன் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் ஷிகார் தவான் மனைவி ஆயிசா ஆகியோர் தென்னாப்பிரிக்காவில் விடுமுறையை கழிக்கும் புகைபடங்கள் வெளியாகி உள்ளன. 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில், சில வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளனர். புதுமண தம்பதிகளான விராத் - அனுஷ்கா இருவரும் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். கேப் டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சரியாக ஆடவில்லை என்றும், அவர் மனைவி அனுஷ்காவுடன் விடுமுறையை கழிப்பதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள், அவர்களை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கோலியின் ஆட்டத்தை நேரில் காண அனுஷ்கா அரங்கத்திற்கு சென்றிருந்தார். இதனையும் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்கள் போட்டு சமூகவலைத்தளங்களில் பரப்பினர். இதனைத்தொடர்ந்து. தற்போது அனுஷ்கா சர்மா தனக்கும், தனது மகளுக்கும் ஜிம் ட்ரெய்னராக மாறியதாக ஷிகார் தவான் மனைவி ஆயிசா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.  இவர்கள் மூவரும் இணைந்து ஜிம்மில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது. 

மேலும், தென்னாப்பிரிக்கா முழுவதும், கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் இணைந்து ஊரைச் சுற்றிப் பார்த்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை வைத்து, கிரிக்கெட் ரசிகர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அனுஷ்கா சர்மா, கேப் டவுனிலிருந்து புறப்பட்டு மும்பை வந்தடைந்தார். 

போட்டோ கேலரி

1 of 2

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close