[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

குல்தீப் இல்லை, ரஹானே ஃபார்ம் சரியில்லை: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி?

ravi-shastri-says-players-shaping-up-well-for-sa-challange

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இதையடுத்து இந்த மாதம் இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது. 

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இந்த தொடரில் குல்தீப் யாதவை சேர்க்காதது ஏன் என்று கேட்கிறார்கள். அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. தென்னாப்பிரிக்க பிட்ச், மணிக்கட்டைப் பயன்படுத்தி வீசும் சுழற்பந்துவீச்சுக்கு சாதமாக இருக்காது. அதனால் அஸ்வின், ஜடேஜாவை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

துணை கேப்டன் ரஹானே ஃபார்ம் பற்றி கேட்கிறார்கள். வீரர்களுக்கு தடுமாற்றம் இருக்கும். ஏன், விராத் கோலியையே எடுத்துக்கொள்ளுங்கள், முதலில் ஆஸ்திரேலியா சென்றபோது அவரால் சரியாக ஆடமுடியவில்லை. ஆனால், அடுத்த தொடரில் சாம்பியன் போல ஆடினார். ரஹானேவும் அப்படித்தான். வெளிநாட்டு பிட்சில் அவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். இலங்கை தொடர் முடிந்த உடனேயே தென்னாப்பிரிக்கா செல்வது கடினம்தான். வீரர்களுக்கு கால அவகாசம் தேவை. இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது’ என்றார் 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close