[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
விளையாட்டு 29 Nov, 2017 10:53 AM

சர்ச்சைக்கு முடிவு: பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்றார்

ben-stokes-greeted-by-his-mum-and-dad-after-landing-in-new-zealand

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்றடைந்தார்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேனில் நடைப்பெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் இரவு விடுதியில் மதுபோதையில் இளைஞரை தாக்கிய விவகாரத்தில் சிக்கியதால், ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடைசி நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் லண்டன் விமானநிலையத்தில் பென் ஸ்டோக்ஸ் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் அணிக்கு மீண்டும் அவர் அழைக்கப்பட்டுள்ளார் என சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. பென் ஸ்டோக்ஸ் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் ஆஷஸ் தொடருக்குத்தான் பென் ஸ்டோக்ஸ் செல்கிறார் என்ற தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்தது. பென் ஸ்டோக்ஸ் தன் சொந்த பயணமாக நியூசிலாந்து செல்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்தது.

பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவர். சிறுவயதிலே அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து. தற்போது ஸ்டோக்ஸின் பெற்றோர்கள் நியூசிலாந்தில் உள்ளதால் அங்கு செல்ல திட்டமிட்டு லண்டன் விமானநிலையத்திற்கு சென்றுள்ளார். அதற்குள் அவர்களது ரசிகர்களின் ஸ்டோக்ஸின் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டனர்.

நியூசிலாந்து சென்ற ஸ்டோக்ஸை, கிறிஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் அவரின் பெற்றோர் வரவேற்றனர். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசியவர், தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட நியூசிலாந்து வந்திருப்பதாக தெரிவித்தார். நியூசிலாந்தில் உள்ள கேண்டர்பரி கிரிக்கெட் அணி சார்பில் முதல் தர போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாடவுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close