[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

இந்தியா-ஆஸி. கிரிக்கெட்: விடாமல் துரத்தும் மழை!

rain-threaten-ind-aus-4th-oneday

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4-வது ஒரு நாள் போட்டியிலும்  மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் நடந்தது. இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக, ஓவர்கள் குறைக்கப்பட்டது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தாவில் நடந்தது. இந்தப் போட்டியிலும் மழை இலேசாக எட்டிப்பார்த்து மிரட்டிவிட்டு சென்றது. இந்தூரில் நடந்த 3-வது கிரிக்கெட் போட்டியிலும் மழை வரும் என்று கூறப்பட்டது. ஆனால், வரவில்லை. இந்நிலையில் 4-வது போட்டி நடக்கும் பெங்களூரிலும் மழை வரும் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டிவியாழக்கிழமை நடக்கிறது.அடுத்த 48 நேரத்திற்கு  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பெங்களூருவில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு 54 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. 

வியாழக்கிழமை நடக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்ததால், அந்த அணியில் சில வீரர்கள் மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close