[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

3வது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா

india-won-the-3rd-match

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் பிஞ்ச் சதமும், கேப்டன் ஸ்மித் அரை சதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானே மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். அவர்களைத் தொடர்ந்து விளையாடிய இந்திய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பாண்டியா 78 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில், 3 வெற்றிகளை பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close